தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 31, 2019, 6:12 PM IST

ETV Bharat / international

ஜாதவ் வழக்கில் வியன்னா ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்!

ஜாதவ் வழக்கில் சர்வதேச அளவில் போடப்பட்ட வியன்னா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி இந்தியக் கப்பல்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவருக்குப் பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்ததை அடுத்து, அவரை மீட்க இந்தியா பெரும் சட்டப் போராட்டம் மேற்கொண்டது.

ஐநா பொதுச் சபையில் புதன்கிழமை குல்பூஷண் வழக்குத் தொடர்பான சர்வதேச நீதிமன்ற அறிக்கையை சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்காவி யூசுப் சமர்ப்பித்துள்ளார்.

அதில் அவர், 'ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் வியன்னா ஒப்பந்தத்தின் 36ஆம் பிரிவை மீறியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சர்வதேச அழுத்தம் காரணமாக குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையைப் பாகிஸ்தான் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details