தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'மோடி ஹிட்லர்' மனித வெடிகுண்டை கட்டி மிரட்டும் பாக்., சர்ச்சை பாடகி

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரபி பிர்ஜடா rabi pizarda

By

Published : Oct 24, 2019, 9:48 AM IST

பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொலி பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பதில் பதிவிட்ட ஒருவர் ‘பாகிஸ்தானின் கலாசார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர் ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக, இந்த உடையை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

பாடகி ரபி பிர்ஜடா இத்தகைய சர்ச்சைப் பதிவு இடுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் மாதம் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சில பாம்புகளையும், முதலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு, பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் அவர் மீது புகார் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காணொலிக்கு செய்தி நிறுவனங்களுக்கு விளக்கமளித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த சர்ச்சைப் பாடகி.

ABOUT THE AUTHOR

...view details