தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2020, 2:44 PM IST

ETV Bharat / international

உளவு பார்த்த விவகாரம்... இந்திய அலுவலருக்கு பாகிஸ்தான் சம்மன்

இஸ்லாமாபாத்: உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய அலுவலருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது

Imran
Imran

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அலுவலர்கள் இருவர் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட இரு அலுவலர்களும் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் நாட்டில் வேலை பார்க்கும் இந்திய அலுவலருக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ”எங்கள் நாட்டு அலுவலர்கள் மீது எந்தவித அடிப்படையுமின்றி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச ராஜாங்க ரீதியான உறவை வரையறை செய்யும் வியன்னா ஒப்பந்தத்தை இந்தியா மீறுகிறது” என குறிப்பிட்டு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கராச்சி விமான விபத்து: நாளை குரல் பகுப்பாய்வு விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details