தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாக்., சிறுபான்மை சமயத்தினர் பிரதமராகும் மசோதா நிராகரிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாத மற்ற சமயத்தினர் பிரதமராக வழிவகை செய்யும் மசோதாவை அந்நாட்டு எம்.பி.,க்கள் நிராகரித்து விட்டனர்.

pak

By

Published : Oct 3, 2019, 12:06 AM IST

இஸ்லாமியர் அல்லாத மற்ற சமயத்தினர் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகவோ, அதிபராகவோ பதவி வாய்க்க வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த நவீத் ஆமிர் ஜீவா என்ற கிறிஸ்தவ எம்.பி.யால் தாக்கல் செய்யப்பட்ட, இந்த மசோதாவை எதிர்த்து பெரும்பான்மையான எம்.பிக்கள் வாக்களித்தனர்.

இதனால் இந்த மசோதா நிறைவேறாமல் போனது.

பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் 41, 91 ஆகிய பிரிவுகளின் படி இஸ்லாமியர் அல்லாத மற்ற சமயத்தவர் பிரதமராகவோ, அதிபராகவோ ஆக முடியாது.

இதையும் படிங்க : 'பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் சிறுபான்மையினர் கொல்லப்படுகிறார்கள்'

ABOUT THE AUTHOR

...view details