வெலிங்டன்: நியூசிலாந்து செவ்வாயன்று (ஜூலை28) ஹாங்காங்குடனான நாடு கடத்தல் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரை தன்னாட்சி பிரதேசத்திற்கான சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியதன் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கையை நியூசிலாந்து எடுத்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்னர் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது நியூசிலாந்தும் இணைந்துள்ளது.
நியூசிலாந்து அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனாவை நம்பியுள்ளது, இதனால் கடந்த காலங்களில் சீனாவுடன் நேரடி அரசியல் மோதலைத் தவிர்க்க பெரும்பாலும் முயன்றது. சீனா ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள நியூசிலாந்தின் பால்பவுடர் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை வாங்குகிறது.
இதற்கிடையில், நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், புதிய சட்டம் சீனா சர்வதேச சமூகத்திற்கு செய்த கடமைகளுக்கு எதிரானது என்றார். மேலும், "ஹாங்காங்கின் குற்றவியல் நீதி அமைப்பு சீனாவிற்கு எதிராக உள்ளது என்பதை நியூசிலாந்தினால் இனி நம்ப முடியாது," என்றும் அவர் கூறினார்.
இரு நாட்டு உறவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்" என்று கூறிய பீட்டர்ஸ் ஹாங்காங்கிற்கான இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதியை சீனாவுக்கான ஏற்றுமதியைப் போலவே நடத்தும்" என்றும் கூறினார்.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், “நியூசிலாந்து அதன் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. நாங்கள் சீனாவுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.