தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈமெயிலில் தகவல் கொடுத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி; கோட்டை விட்ட பிரதமர்!

வெல்லிங்டன்: நியூஸிலாந்தில் 48 பேர் பலியான துப்பாக்கி சூடு நடத்துவதற்கு 8 நிமிடங்களுக்கு முன்பாக, தாக்குதல் தொடர்பாக ஈமெயிலில் அந்நாட்டு பிரதமருக்கு, தீவிரவாதி தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.

நியூஸிலாந்து தாக்குதலுக்கு முன்னால் தீவிரவாதி பிரதமருக்கு அனுப்பிய ஈமெயில்

By

Published : Mar 17, 2019, 7:24 PM IST

கிறிஸ்ட்சர்சில் சனிக்கிழமை அன்று தீவிரவாதி நடத்தியதுப்பாக்கி சூட்டில் 48 பேர்பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈட்டுபட்ட தீவிரவாதி, தாக்குதல் நடத்துவதற்கு எட்டு நிமிடங்களுக்கு முன்பாக, தாக்குதல் மற்றும் தன்னுடையகொள்கைகளைக் குறித்தும் பிரதமருக்கும், சில அலுவலர்களுக்கும் ஈ-மெயில் அனுப்பியுள்ளார்.ஈ-மெயில் அனுப்பப்பட்ட இரண்டாவது நிமிடம் நாடாளுமன்ற பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் ஜஸிந்தா கூறுகையில், அனுப்பப்பட்ட ஈமெயிலில் எந்த இடம் என்றும் மற்ற விபரங்கள் ஏதும் குறிப்பிடாததால் எந்த நடவடிக்கையும் எடுத்து இந்த அசம்பாவிதத்தை எங்களால் தடுக்கமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details