தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிறந்தநாளில் சர்ச்சையில் சிக்கிய நேபாள பிரதமர்!

காத்மாண்டு: பிறந்தநாள் விழாவில் நேபாள நாட்டின் வரைபடம் வரையப்பட்ட கேக்கை பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nepal PM's b'day marred by controversy over cutting of cake with country's map
Nepal PM's b'day marred by controversy over cutting of cake with country's map

By

Published : Feb 24, 2020, 10:51 PM IST

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி நேற்று தான் பிறந்த ஊரான டெர்காதூம்மில் தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் அவரது மனைவி ராதிகா ஷாக்கியா, பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பிறந்தநாள் விழாவில் கே.பி. ஷர்மா ஒலி கேக் வெட்டினார். அந்தக் கேக்கில் நேபாள நாட்டின் வரைபடம் வரையப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

இதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து மூத்த வழக்குரைஞர் திரிபாதி, நாட்டை சிதைப்பதற்கான நோக்கத்தில் நேபாளத்தின் வரைபடம் வரைந்த கேக் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details