தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரசாயனத் தொழிற்சாலை மேம்படுத்துவது குறித்து விவாதித்த கிம் ஜாங்!

சியோல்: கொரிய நாடுகளுக்கு இடையே பிரச்னை உள்ள சூழ்நிலையில் நடைபெற்ற பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் ரசாயனத் தொழிற்சாலை துறையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது‌.

kim
kim

By

Published : Jun 9, 2020, 2:25 AM IST

வட கொரியா அதிபர் கிம் ஜாங் தலைமையில் நடைபெற்ற பொலிட் பீரோ கூட்டத்தில் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். சுமார் இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன‌.

அதில், கோவிட் -19 தொற்று காரணமாக உலகளவில் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது‌. இது வடக்கின் பொருளாதாரத்தில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அணு சக்தி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவுள்ளோம்.

நாட்டில் ரசாயனத் தொழிற்சாலை துறையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்தவது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நாட்டின் தன்னிறைவு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்தும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதகா தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details