தமிழ்நாடு

tamil nadu

'பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில் காஷ்மீர் முக்கிய இடத்தைப்பெறும்' - குரேஷி

By

Published : Feb 9, 2020, 5:12 PM IST

இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிக்கல் என்பது பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில், ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.

Shah Mahmood Qureshi
Shah Mahmood Qureshi

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய குரேஷி, "காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை முன்வைத்தால் மட்டுமே, தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் உண்டாகும். காஷ்மீர் சிக்கல் என்பது பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய இடத்தைத் தொடர்ந்து பெற்றிருக்கும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் பிரதமர் ராஜா பரூக் ஹைதர் கான், "காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்" என்றார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு!

ABOUT THE AUTHOR

...view details