ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலின் ஷோா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 25ஆம் தேதி வந்த மூன்று பயங்கரவாதிகள், அங்கு வழிபட்டுக் கொண்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 25 போ் உயிரிழந்தனா். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனா்.
உலக நாடுகள் எல்லாம் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதற்கு இந்தியா உள்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவரும் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் இந்தியர்” எனத் தெரிவித்தார்
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவர் கேரளாவைச் சேர்ந்த மோசின் என்பதும் 29 வயதான இவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், மோசின் 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவர் எந்தத் தொடர்பிலும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...கரோனா வைரஸ் பெருந்தொற்று : இலங்கையில் சிக்கித் தவிக்கும் 2000 இந்தியர்கள்!