ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி நீதி விசாரணை செய்யும் வகையில், புதிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற ஹாங்காங்க் அரசு தீவிரம் காட்டி வந்தது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தற்போது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கேஸ்வே பே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் கூட்டத்தை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.