ஹாங்காங் மேற்கொண்ட தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனனாக அங்கு கோவிட்-19 நோய் தொற்று பெருமளவிற்கு கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அங்கு மீண்டும் கோவிட்-19 தலைதூக்க வாய்ப்பு உள்ளதால் அதனை எதிர்கொள்ள ஹாங்காங் பல்வேறு வகையில் தயாராகி வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஹாங்காங் விமானநிலையத்தில்
கிருமி நாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நகர விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கோவிட்-19 பரவலைத் தடுக்க விமான நிலையத்தில் பிரத்தியேகமாக கிருமி நாசினி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு அமைப்பை நிறுவியுள்ளோம்.
டெலிபோன் பூத் அளவில் காட்சியளிக்கும் அந்த அமைப்பில், ஃபோடோகேட்டலிஸ்டு, நானோநீட்சில் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மனிதர்களின் உடலில் உள்ள 99 சதவீத கிருமிகளை இந்த கருவிகளால் அழிக்க முடியும். தற்போது பொது சுகாதாரப் பணியாளர்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கரோனா ஊரடங்கைத் தளர்த்த பெல்ஜியம் திட்டம்!