ஒலிம்பிக் போட்டியின் வரலாறு கி.மு.விலிருந்தே தொடங்குகிறது. அப்போது, ஜீயஸ் என்னும் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன.
நவீன வடிவம் பெற்ற ஒலிம்பிக்
ஆனால், இந்தப் போட்டிகள் நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது 1894ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தான். இதனை ஒருங்கிணைத்த பியரி டி கூபர்டின், 'ஒலிம்பிக் போட்டியின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டு வெர்ஷனில் ஒலிம்பிக்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. கோடைக் காலத்திலும், குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி நடத்தப்படுகின்றன.
ரத்தான ஒலிம்பிக் போட்டிகள்
குறிப்பாக 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை.
28 ஒலிம்பிக் பதக்கங்கள்
இதுவரை 31 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 28 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இருளில் மிளிரும் ஒலிம்பிக் வளையங்கள் ஐந்து வளையங்கள் சொல்வது என்ன?
ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய கண்டங்களைக் குறிக்கின்றன. இந்தக் கொடி 1920ஆம் ஆண்டு தான் முதன்முதலாகப் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், 32ஆவது முறையாக டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. அதில், 16 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியா பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் ஹீரோ உசேன் போல்ட் உலக ஒலிம்பிக் தினம்
நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23ஆம் தேதியை, 'உலக ஒலிம்பிக் தினம்' ஆக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:யூரோ 2020 ரவுண்ட் அப்: பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்