கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரில் செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் தீடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மதியம் 2.48 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
சீனா ரசாயன ஆலையில் வெடிவிபத்து! 44 பேர் சாவு
பெய்ஜிங்: சீனாவில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
ரசாயன ஆலை வெடிவிபத்து
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர், பலத்த காயமடைந்த 90-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். முன்னதாக, 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.