தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வர்த்தகப் போரால் உலக பொருளாதாரம் பின்னடைவு: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

டோக்கியோ: அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரால் உலகப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : Jun 28, 2019, 8:43 PM IST

eu heads

ஜி20 நாடுகளின் 14ஆவது உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது.

உச்சிமாநாட்டில், பருவநிலை மாற்றம், டிஜிட்டல் பொருாளாதரம் உள்ளிட்ட முக்கி பிரச்னைகளுக்கு இணையாக அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரும் பேசும்பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், வர்த்தகப் போர் தொடர்பாக ஜி20 மாநாட்டில் உரையாற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரானது உலகப் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக எச்சரித்தனர்.

"அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவு நலிவடைந்துள்ளதால், உலக பொருளாதாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது," என ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜான் க்ளாட் ஜங்கர் தெரிவித்தார். மேலும், உலக வர்த்தக அமைப்பை சீரமைப்பது தொடர்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தாங்கள் பேசிவருவதாகவும் அவர் கூறினார்.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், வலுத்துவரும் வர்த்தகப் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஷிஜிங் பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details