ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுடைய மனித உரிமைகளைப் பேணவும், அந்த நாடுகளை வளர்ச்சியை நோக்கிய பாதையில் இட்டுச்செல்லவும் மனித உரிமைகள் ஆணையக்குழு, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு 1948ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்டாலின்!
ஜெனிவா: திமுக தலைவர் ஸ்டாலின் மனித உரிமைகள் ஆணையக்குழுவின் 42ஆவது கூட்டத்தில் பங்கேற்க செல்லவுள்ளார்.
stalin attending UN geneva meeting
இந்நிலையில் இதன் 42ஆவது மனித உரிமை ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தமிழரான நவநீதம் பிள்ளை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 27, 2019, 11:41 AM IST