பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 41 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்று (ஆக.18) காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், சாலைகள், சுவர்கள் ஆகியவற்றில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.5 ஆக பதிவு!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஆக.18) காலை ஏற்பட்டுள்ளது.
damage-after-6-dot-5-magnitude-quake-hits-philippines
வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவை நிலநடுக்கத்தால் குலுங்கியதையடுத்து, மக்கள் அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: சிறிசேனவுக்கு அழைப்பாணை!