வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலையாக உருவாகி, பின்னர் அதிதீவிர புயலாக உருவெடுத்த ஃபோனி புயல், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் தாண்டவம் ஆடியுள்ளது. அதே காரணமாக, அம்மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான வங்க தேசத்தில் ஃபோனி புயலினால் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மருக்கு படையெடுக்கும் ஃபோனி!
நேபைடாவ்: ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் தாண்டவம் ஆடிய ஃபோனி புயல், தற்போது மியான்மர் நாட்டை நோக்கி நகர்வதால் அங்கு நிலச்சரிவு, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியான்மருக்கு செல்லும் ஃபோனி
இதன் காரணமாக, அந்நாட்டில் உள்ள பாகோ (Bago), யாங்கோன் (Yangon), டனின்தார்யி (Tanintharyi) உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வலுவிழந்துள்ள ஃபோனி புயல் மியான்மர் நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும், மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு அபாயங்களால் மலைப்பகுதிகளிலும், ஆற்றுக்கு அருகிலும் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.