சீனாவின் வூஹான் பகுதியில் முதன் முதலாக அறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று நோய், மின்னல் வேகத்தில் உலக நாடுகளைத் தாக்கியது. இந்த வைரஸை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. சுமார் மூன்று மாதங்கள் கரோனாவால் ஒடுங்கியிருந்த சீன நாடு, தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் சுஜோ (Suzhou) நகரில் இயங்கிவரும் யுய்யா (Yueya) தொழிற்சாலை கரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவில் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், முத்தப் போட்டியை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, முத்தப்போட்டியில் 10 ஜோடிகள் கலந்துகொண்டனர். கரோனா தற்காப்புக்காக ஜோடிகளுக்கு நடுவில் ப்ளெக்ஸிகிளாஸ் (plexiglass) வைக்கப்பட்டது மட்டுமின்றி, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.