தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஏழு குழந்தைகள் உயிரிழப்பு, 70 காயம்!

By

Published : Oct 27, 2020, 10:42 AM IST

Published : Oct 27, 2020, 10:42 AM IST

Updated : Oct 27, 2020, 11:23 AM IST

4 killed, 26 injured in Pakistan's Peshawar blast
4 killed, 26 injured in Pakistan's Peshawar blast

10:40 October 27

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாட சாலையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாகிஸ்தான் வடமேற்கு நகரமான பெஷாவர் புறநகரில் இஸ்லாமிய பாடசாலையில் இன்று (அக். 27) காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்தில்யே ஏழு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புக் குழுவில், காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல் அலுவலர் வகார் அசிம் கூறுகையில், “ஜாமியா ஜுபைரியா மதரஸாவின் பிரதான மண்டபத்தில் ஒரு மதகுரு இஸ்லாத்தின் போதனைகள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மதரஸாவிற்கு வந்த யாரோ ஒருவர் பையை விட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டு வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க...துர்கா பூஜையின்போது விபத்து 5 பேர் பலி!

Last Updated : Oct 27, 2020, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details