காபூலின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள இந்தச் சிறப்புப் படை தளத்தை நேற்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் படைகளின் தளபதி ஸ்காட் மில்லர் பார்வையிட்டதற்கு எதிர்வினையாக, இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக ஆப்கான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் கூறுகையில், “இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிக்குப் படைத் தளத்தின் அடித்தளமே இலக்காக இருந்திருக்கலாம். ஆனால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அதில் அப்பாவி பொதுமக்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.”என்றார்.
தலிபான்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மூவர் உயிரிழப்பு! அமெரிக்க சமாதான தூதர் ஸல்மே கலீல்சாத், தலிபான்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் முழு துருப்புக்களையும் திரும்பப் பெறுவதில், அமெரிக்கப் படைகள் மீதும், நேட்டோ படைகள் மீதும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
காபூல், அதன் சுற்றுப்புறங்களில் தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :கரோனாவுக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகள் - "மீண்டுவருவது உறுதி" என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை