இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிபர் கனி கூறியதாவது: அமைதி ஒப்பந்தந்தத்தின் ஒரு பகுதியாக, சிறையிலுள்ள 5,000 தலிபான் கைதிகளை விடுவிப்பது, அமெரிக்க - தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும், அதனை ஒரு முன் நிபந்தனையாக கருத முடியாது.
இந்த ஒப்பந்தத்தில் ஐந்தாயிரம் தலிபான் கைதிகளை விடுவிப்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 1,500 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள கைதிகளை விடுவிப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.
இந்த கைதிகள் குறித்து மறுவரையறை தேவைப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதே இதற்கு காரணம். இதனை அதிபர் கனியும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை, கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ முன்னிலையில், ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாதும் தலிபான் பேச்சுவாா்த்தைக் குழுத் தலைவா் முல்லா பராதாரும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5,000 தலிபான் பயங்கரவாதிகள் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தலிபான்கள் தங்களிடம் கைதிகளாக உள்ள 1,000 பேரை விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலிபான் கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்று அதிபா் அஷ்ரஃப் கனி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 14 மாதங்களில் அமெரிக்கப் படையினர் நாடு திரும்ப உள்ளதாகவும், தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை