தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 8:35 PM IST

Updated : Oct 21, 2020, 2:47 PM IST

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு; ஐந்து பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜல்ரேஸ் மாவட்டத்தில் நிகழந்த குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Afghanistan
Afghanistan

ஆப்கானிஸ்தானின் மைதான் வார்தக் பிராந்தியத்தில் உள்ள ஜல்ரேஸ் மாவட்டத்தில் இன்று (அக்.20) இரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதை பிராந்திய ஆளுநர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பின் பின்புலம் குறித்து பிராந்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதுவரை இந்தச் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பயங்கரவாத சிக்கலுக்கு தீர்வு மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியது. அல்கொய்தா, தலிபான் அமைப்பை கட்டுப்படுத்த 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா தன்நாட்டு ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி படையெடுத்தது.

சுமார் 20 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது தனது ராணுவத்தை திரும்பிப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அரசு, இந்த அமைதி ஒப்பந்ததை மேற்கொண்டது. இருப்பினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது கவலை தரும் அம்சமாக உள்ளது.

இதையும் படிங்க:தடுப்பூசியை கண்டுபிடிக்க பிரிட்டன் புது முயற்சி

Last Updated : Oct 21, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details