உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பு மருத்தின் மீது, உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தத் தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்டங்களில் சிறப்பான முடிவுகளை அளித்துள்ளதால் விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அரிதான நரம்பியல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பிரிட்டன் உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்தத் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.
இந்தச் சூழலில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன், "இது நல்லது என்றே நான் நினைக்கிறேன். மருத்துவ ஆராய்ச்சியில் எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் எடுத்துரைக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.