தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் அமெரிக்கா!' - மைக் பாம்பியோ

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா கடுமையாக உழைத்துவருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மைக் போம்பியோ

By

Published : Jul 31, 2019, 1:50 PM IST

அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இந்திய பொருளாதார நிபுணர்கள் இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதி-இறக்குமதியின் வரிகள் குறித்து விவாதித்தனர்.
இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் மேம்பட்ட வளர்ச்சியின் அடிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்திய யுக்தியை ட்ரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்து அமெரிக்கா மேம்பட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டுடன் இணைந்து தாங்கள் (அமெரிக்கா) கடுமையாக உழைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விதமாக பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்கலா, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் வர்த்தகம் 2018ஆம் ஆண்டு 142 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இது வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 238 டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details