ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் க்யுஷேஸ்தான் மாகாண கமாண்டோவாக இருப்பவர் ஹாசன் ஷாவர்பூர். இவர் தனது படை மூலம் ஈரான் நாட்டு போராட்டக்காரர்களைப் படுகொலை செய்ததாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், குற்றம் இழைத்தவரின் பட்டியலில் அமெரிக்கா இவர் பெயரைச் சேர்த்துள்ளது. இதன்மூலம், இவரும் இவரின் குடும்பத்தாரும் அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூத்த ராணுவ அதிகாரி அமெரிக்கா செல்ல தடை
வாசிங்டன்: ஈரான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியான ஹாசன் ஷாவர்பூர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
America
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். அமெரிக்க, ஈரான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வார்த்தைகளில் கவனம் தேவை' - ஈரான் தலைவருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை