தமிழ்நாடு

tamil nadu

ட்ரம்ப் ஆதரித்த மலேரிய மருந்து: பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஃப்.டி.ஏ.

By

Published : Jun 16, 2020, 9:42 AM IST

வாஷிங்டன் : ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அவசரகால கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தும் உத்தரவை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் (FDA) திரும்பப்பெற்றுள்ளது.

hydroxychloroquine
hydroxychloroquine

மலேரியா, முடக்குவாதத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்சி குளோரோகுயின். இந்த மருந்து தற்போது பல நாடுகளில் கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் ஆதரிக்கப்பட்ட இந்த மருந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்துமாறு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துக் கழகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயினைப் பயன்படுத்துவதால் பயங்கர பக்க விளைவுகள் ஏற்படுவதாகப் புகார் எழுந்ததை அடுத்து அந்த உத்தரவை உணவு மற்றும் மருந்துக் கழகம் திரும்பப்பெற்றுள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின், குளோரோகுயின் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைவிட, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகம் என அக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 80 லட்சத்தைக் கடந்து விறுவிறுவென அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details