தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் தொடரும் கரோனா பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் பத்து லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

us-has-performed-1-million-coronavirus-tests-so-far-trump
us-has-performed-1-million-coronavirus-tests-so-far-trump

By

Published : Mar 31, 2020, 8:39 AM IST

அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 19 ஆயிரத்து 988 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 476ஆக அதிகரித்துள்ளதாகவும், ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி இரண்டாயிரத்து 828 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, அமெரிக்காவில் மேலும் பத்து லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சமூக விலகல்: அமெரிக்காவில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details