தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவிற்கு செல்லும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர்

இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் சீனாவிற்கு இந்தாண்டு இறுதிக்குள் செல்லவுள்ளார்.

By

Published : Jul 22, 2020, 12:53 AM IST

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்

கரோனா விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் சீனாவிற்கு செல்லவுள்ளார்.

செயலராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முதலான அவர் சீனாவிற்கு செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சீன வெளியுறவுத் துறை செயலரிடம் பல விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளேன். இரு நாட்டின் நலனுக்காகவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் விதமாகவும் இந்தாண்டு இறுதிக்குள் சீனாவிற்கு செல்லவுள்ளேன்.

நெருக்கடி காலகட்டத்தில் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும்" என்றார். கரோனா, ஹாங் காங் பாதுகாப்பு சட்டம், இந்தோ பசிபிக் பிரச்னை போன்ற பல விவகாரங்களில் அமெரிக்க சீன நாடுகளுக்கிடையே முரண்பாடு நிலவிவருகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமெரிக்க, இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது - ஜெய்சங்கர்

ABOUT THE AUTHOR

...view details