தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வேலையில் மந்தம்: ஜூம் மீட்டிங்கில் 900 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் ஜூம் மீட்டிங்கின்போது வெறும் 3 நிமிடங்களில் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஊழியர்கள் பணிநீக்கம்
ஊழியர்கள் பணிநீக்கம்

By

Published : Dec 7, 2021, 9:22 PM IST

Updated : Dec 7, 2021, 9:35 PM IST

நியூயார்க்:அமெரிக்காவில் 'பெட்டர் டாட் காம்' என்ற வீட்டு வசதி கடன் நிறுவனத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் என்பவர் தொழிலதிபர்கள் சிலருடன் சேர்ந்து கூட்டாக நடத்திவருகிறார். இவர் அவ்வப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது நிறுவனஊழியர்களுடன் உரையாற்றுவது வழக்கம்.

இதேபோல நேற்று உரையாடியுள்ளார். அப்போது வெறும் 3 நிமிடங்களில் 900 பணியாளர்களை திடீரென்று பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்துள்ளார். வேலையில் மந்தம், திறமையின்மை, உற்பத்தி திறன் குறைவு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பாதிபேர் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து 8 மணி நேர ஊதியத்தை பெறுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவன ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்

Last Updated : Dec 7, 2021, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details