கரோனா பாதிப்பு பரவலை தடுக்க உலக நாடுகள் ஒரு மாத காலமாக போராடிவருகின்றன. இந்த வைரஸ் பாதிப்பிற்கு பிரத்யேக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேசமயம், மலேரியா, எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்நோய் சிகிச்சைக்காக தற்காலிகமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் இந்த மருந்துகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு போதிய இருப்பு உள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இம்மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து உதவியுள்ளது.