இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதனை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றால் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதற்கிடையில் கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் இது நியூயார்க்கில் 1,500க்கும் மேற்பட்ட கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கும் பரிசோதிக்கப்படுகிறது. இது ஒரளவு பலன் அளிக்கிறது. ஆகவே ட்ரம்ப், 29 மில்லியனுக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்கியுள்ளார்.