தமிழ்நாடு

tamil nadu

60 நாட்களுக்கு கிரீன் கார்டு கிடையாது ட்ரம்ப் உத்தரவு

By

Published : Apr 22, 2020, 11:06 AM IST

வாஷிங்டன்: கரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூழலில் குடியேற்றத்தை தற்காலிகமாக தடுக்கும் விதமாக 60 நாட்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

trump
trump

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பானது அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.2 லட்சமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பாதிப்பு அந்நாட்டில் தீவிரமான பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக நடவடிக்கை முடங்கியுள்ளதால் வேலையிழப்பு தீவிரமடைந்துள்ளதால் இந்த அசாதாரண சூழலை சமாளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திணறிவருகிறார்.

வரும் நவம்பர் மாத இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்நாட்டு மக்களின் அதிருப்தியை போக்கும் நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டில் புதிய குடியேற்றத்திற்கு 60 நாட்கள் தடை விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் அந்நாட்டு குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினரின் குடியேற்றம் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவில் குடியுரிமை பெற கிரீன் கார்டு விண்ணப்பித்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நீண்ட நாள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு பிந்தைய உலகம் கண்டுள்ள பெரும் மாற்றங்கள் என்ன? ஒரு அலசல்

ABOUT THE AUTHOR

...view details