தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முதல் விவாதத்தில் எனக்குத்தான் வெற்றி - அடித்து கூறும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் பொது விவாதத்தில் நான்தான் வெற்றிபெற்றேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

By

Published : Oct 1, 2020, 10:51 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வான பொது விவாதம் கடந்த (செப்.29)ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் காரசாமான விவாதத்தை மேற்கொண்டார்.

இந்த விவாதத்தில் கோவிட்-19, வரி விவகாரம், சட்டம் ஒழுங்கு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் இருவரும் விவாதித்தனர். விவாதம் முடித்து அதன் கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ட்ரம்பே வெற்றிபெற்றார் என முடிவுகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விவாதம் முடிந்த அடுத்த நாள் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முடிவுகளில் நான்தான் வெற்றிபெற்றுள்ளேன். ஜோ பிடன் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார். அடுத்த இரண்டு விவாதங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அதேவேளை ஜோ பிடனுக்கு என்னுடன் விவாதம் செய்ய விருப்பமில்லை எனத் தெரிகிறது' எனக் கூறினார்.

ட்ரம்ப்-பிடனுக்கு இடையே அடுத்த பொது விவாதம் ப்ளோரிடா நகரில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. மூன்றாவது இறுதி விவாதம் டென்னிசி நகரில் அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:திடீர் வெடிச்சத்தம்: அதிர்ந்த பாரீஸ் நகரம்

ABOUT THE AUTHOR

...view details