அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள செய்தியாளர்கள் அறையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு! செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய ட்ரம்ப்!
06:58 August 11
வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
அப்போது அங்கு வந்த அதிபர் ட்ரம்பின் பாதுகாவலர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேர பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில நிமிடங்களில், செய்தியாளர்கள் முன்பு மீண்டும் தோன்றிய அதிபர், “சிரமத்துக்கு மன்னிக்கவும். வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய நபர் பிடிபட்டுள்ளார். அவர் உள்பட காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாதுகாவலர்களுக்கு நன்றிகள்” என்றார்.
இந்தச் துப்பாக்கிச் சூடு வெள்ளை மாளிகையின் 17ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூவில் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு காரணமாக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தூங்கு மூஞ்சி பிடனை வெற்றிபெற வைக்க சீனா முயல்கிறது - ட்ரம்ப் குற்றச்சாட்டு