ரியோ டி ஜெனிரியோ:உலக நாடுகள் தற்போதுவரை பேசும் விஷயமாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இது தொடர்கதையாகிவருகிறது.
தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை சில நாடுகளின் தலைவர்கள் அங்கீகரிக்க மறுக்கின்றனர்.
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் தனக்கு கிடைத்த தகவல்களின்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பிரேசிலில் நடைபெற்ற தேர்தல்களிலும் தனக்கு சந்தேகம் வலுக்கிறது என்றார். மேலும், 2022ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:'ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார்' - ஒப்புக்கொள்ளும் குடியரசு கட்சியினர்