தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜோ பைடன் பதவியேற்பு விழா: புதினுக்கு சென்ற அழைப்பிதழ்

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பிதழ் அணுப்பப்பட்டுள்ளது.

Russia
Russia

By

Published : Jan 12, 2021, 4:17 PM IST

அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை ரஷ்ய தூதரகத்திற்கு அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம் அனுப்பியுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பின் ரஷ்ய அதிபர் புதின் ஜோ பைடனுக்கு தந்தி மூலம் வாழ்த்து கடிதம் அணுப்பியிருந்தார். தற்போது அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதினின் பிரதிநிதியாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனதோலே ஆன்டனோவ் விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details