ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு வெள்ளை நிறவெறி காவலரால் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான போரட்டம் பற்றிக்கொண்டது. அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போராட்டக்காரர்கள் போராடிவருகின்றனர்.
இந்த போராட்டத்தின் அங்கமாக ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளை அழைத்துவந்து வியாபாரம் செய்த நபர்கள், மன்னர்களின் சிலைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தி ஏரியில் வீசினர்.