தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் 40ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் - இம்ரான்கான் ஒப்புதல்

நியூயார்க் : பாகிஸ்தானில் 40ஆயிரம் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Imran Khan

By

Published : Jul 24, 2019, 4:03 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ள நிலையில், இருநாட்டு உறவையும் மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசினார்.

இதன்பிறகு அமெரிக்காவின் இன்ஸ்டியூட் ஆப் பீஸ் என்ற அமைப்பில் உரையாற்றும்போது, தனது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு, நாட்டில் இயங்கிய பயங்கரவாத குழுக்களை சரணடைய செய்ய அரசியல் தைரியம் இல்லாமல் இருந்தனர். ஏனெனில் பயங்கரவாத குழுக்களை பற்றி எப்பொழுது பேசினாலும், நாட்டில் 40 ஆயிரம் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இருந்து கொண்டு பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் சில பகுதிகளில் சண்டையிட்டு வந்தனர்.

இதற்கு பயந்தே அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக 2014ஆம் ஆண்டு ராணுவப் பள்ளி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 மாணவர்கள் பலியாகினர். இதன்பிறகே அரசியல் கட்சியினரும், பாகிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாத குழுவும் இயங்க அனுமதிக்கப் போவதில்லை என தேசிய அதிரடி சட்டத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் முதல் அரசாக எங்கள் அரசு உள்ளது என்றார். இதைத் தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போது, நாட்டின் எல்லைப் பகுதியில் 40 வெவ்வேறு பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன என்றார்.

ABOUT THE AUTHOR

...view details