தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க மண்ணில் இருந்து 2 பேரை விண்ணுக்கு கடத்த நாசா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் அந்நாட்டு மண்ணிலிருந்து இரண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

By

Published : Apr 23, 2020, 9:41 AM IST

NASA
NASA

அமெரிக்க நிறுவனமான எஸ்பேஸ் எக்ஸ் தயாரிப்பில் உருவான ஃபல்கன் 9 என்ற ராக்கெட்டில் நாசா விண்வெளி வீரர்களான ராபர்ட் பென்கென், டவுக்கல் வூரா ஆகியோர் மே 27ஆம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட உள்ளனர்.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமெரிக்க மண்ணிலிருந்து அந்நாட்டு ராக்கெட் மூலம் மீண்டும் ஒருமுறை நாசா வீரர்களை மே 27ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஃபல்கன் 9

ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியோடு 'க்ரூ ட்ராகன்' விண்கலம் மவுண்ட் செய்யப்பட்ட ஃபல்கன் என்ற ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்டுள்ள வீடியோ

இதையும் படிங்க : கரோனா: வீட்டிலிருந்தபடியே மாதிரி சேகரிக்கும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details