தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இணையதள தணிக்கை முறைக்கு எதிராக ஆணை: ட்ரம்ப் மீது வழக்கு!

வாஷிங்டன்: இணையதள தணிக்கை முறைக்கு எதிராக ஆணை பிறப்பித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

trump
trump

By

Published : Jun 4, 2020, 5:02 PM IST

சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பாகவும், மக்கள் எண்ணத்தைத் திசை திருப்பும் வன்முறைத் தூண்டும் வகையிலும் இருப்பதாகப் பலதரப்பினர் கருதுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்த இரண்டு ட்வீட்கள் உண்மைக்கு மாறாக இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிறுவனர் அந்த ட்வீட்டில் எச்சரிக்கை வாசகங்களைப் பதிவிட்டார்.

ட்விட்டரின் இந்த நடவடிக்கை அதிபர் ட்ரம்பை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதையடுத்து, மக்களின் பேச்சுரிமைக்குக் கடிவாளம் போடும் இணையதள தணிக்கை முறைக்கு தடைவிதித்து ட்ரம்ப் கடந்த மாதம் 28ஆம் தேதி ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.

இது அரசியல் காரணங்களாகப் பிறக்கப்பட்ட ஆணை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆணையில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப மையம் (Center for Democracy and Technology) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ட்ரம்ப் பிறப்பித்துள்ள ஆணை அமெரிக்க அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக உள்ளதென ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப மையம் தமது மனுவில் கூறியுள்ளது.

இந்த உத்தரவைத் தடைசெய்வதன் மூலம் 2020 அதிபர் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யலாம் என ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் அலெக்சாண்ரா கிவ்விங்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ட்ரம்ப் பேஸ்புக்கில் சர்ச்சை போஸ்ட்: நீக்க மறுக்கும் மார்க்கை வறுத்தெடுக்கும் ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details