தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெனிசுலாவில் 30 நாட்களுக்குள் மின்சாரம் - ஜூவான் குவாய்டோ உறுதி!

கராகஸ்: வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், அதிபர் மடூரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

By

Published : Apr 6, 2019, 7:51 PM IST

வெனிசுலா எதிர்கட்சி தலைவர் ஜூவான் குவாய்டோ

வெனிசுலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிரான நிலைப்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், அதிபர் பதவியிலிருந்து தான் இறங்கப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படாது என்றும் மடூரோ அறிவித்தார்.

இதனையடுத்து, வெனிசுலாவில் நடைபெறும் அரசியல் நெருக்கடியை பிற தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, வெனிசுலாவிக்கு ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்பிவைத்தது. இதனால் பதற்றமான சூழல் மீண்டும் உருவெடுத்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். மின்சாரம், குடிநீர், தொலைதொடர்பு உள்ளிட்டவை இல்லாமல் வெனிசுலா மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெனிசுலாவில் அதிபர் மடூரோவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஜூவான் குவாய்டோ, 30 நாட்களுக்குள் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், வெனிசுலா அரசின் அலட்சியம், ஊழல் உள்ளிட்டவை தான் மின்சார பற்றாக்குறைக்கு காரணம் என ஜூவான் குவாய்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details