தமிழ்நாடு

tamil nadu

ஜெர்மன் ஷெபர்டு நாய்க்குப் பிறந்த பச்சை நிற நாய்க்குட்டி - பார்வையாளர்கள் வியப்பு

By

Published : Jan 17, 2020, 2:49 PM IST

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜெர்மன் ஷெபர்டு நாய் ஒன்று மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் குட்டியை ஈன்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Green Puppy Born In North Carolina USA
Green Puppy Born In North Carolina USA

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜெர்மன் ஷெபர்டு நாய் ஒன்றை வளர்த்துவருகின்றனர். இந்த நாய் சமீபத்தில் எட்டு குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

தாய் நாய் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்க அது ஈன்ற பல குட்டிகளும் கறுப்பு, வெளிர் பழுப்பு நிறத்திலும் ஒரே ஒரு நாய்க்குட்டி மட்டும் முற்றிலும் வித்தியாசமாக மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் பிறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குட்டிக்கு அதன் உரிமையாளர் ஹல்க் எனப் பெயரிட்டுள்ளார். பச்சை நிறத்தில் பிறந்துள்ள நாய்க்குட்டியைக் காண பலரும் வருகைதந்து வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

இது குறித்து நாயின் உரிமையாளரிடம் பேசிய விலங்கியல் நிபுணர்கள், விரைவில் அந்த நாய்க்குட்டி இயல்பான நிறத்திற்கு மாறும் என்றும், அதிசயக்கத்தக்க நிகழ்வாக அவ்வப்போது இதுபோல நிகழும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பச்சை நிற நாய்க்குட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க...

ட்ரம்பின் பதவி நீக்க விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details