அமெரிக்கா புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனம் ஜிலீட் அறிவியல் இங்க். இந்த நிறுவனத்தின் சார்பாக ரெம்டெசிவிர் என்று மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் பாதுகாப்புத் துறையினரிடம் அவசரமாக ஒப்புதல் பெறப்பட்டது.
இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தற்போது ரெம்டெசிவிர் மருந்தின் மூலம் வென்டிலேட்டர்கள் சிகிச்சையின் தேவை குறைந்ததோடு, நோயாளிகள் வேகமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் பத்திரிகையில், ''ரெம்டெசிவிர் மருந்தின் மூலம் 10 நாடுகளைச் சேர்ந்த 1063 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ப்ளேஸ்போ (placebo) மருந்தின் மூலம் சிகிச்சைப் பெற்ற நபர்கள் 15 நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல் ரெமெடிவர் மருந்தின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டவர்கள் 11 நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து ப்ளேஸ்போ மருந்தால் சிகிச்சை பெறுபவர்கள், ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சை பெறுவர்கள் ஆகிய ஒரு தரப்பினரின் மீட்பு விழுக்காடு குறித்து 15 நாள்கள் அளவீடு செய்யப்பட்டது. அதில் ரெம்டெசிவிர் மருந்தால் சிகிச்சைப் பெற்றவர்கள் முடிவுகள் நல்ல பலன்களைக் கொடுத்துள்ளன.