அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (செப். 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தடுப்பூசி பரிசோதனை முடிந்து, உறுதிப்படுத்தப்பட்ட பின் அந்தத் தடுப்பூசியை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் கிடைக்க அரசு வழிவகைச் செய்யும். அதன்படி ஏப்ரல் 2021-க்குள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை அமெரிக்காவில் மூன்று தடுப்பூசிகள் இறுதி பரிசோதனையில் உள்ளது. இதற்காக நம் மருத்துவர்கள் ஒரு கடிகாரம் போல சுழன்று பணியாற்றிவருகின்றனர். இதன்மூலம் விரைவில் பல மக்களின் உயிர்கள் காக்கப்படுவது மட்டுமின்றி, கட்டுப்பாடுகளும் தளர்க்கப்படும்” என்றார்.