தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நூறு நாளில் 100 மில்லியன் கரோனா தடுப்பூசி விநியோகம் - ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: 100 நாள்களில் 100 மில்லியன் (10 கோடி) மக்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று அமெரிக்காவின் அதிபராகவுள்ள ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

COVID cases in USA  Biden's health team  US COVID situation  US COVID vaccine distribution  கரோனா தடுப்பூசி  ஜோபிடன்  யுஎஸ் கோவிட் தடுப்பூசி விநியோகம்
Biden's health team

By

Published : Dec 9, 2020, 9:08 AM IST

தொற்றுநோய் மறுமொழி குழுவை அறிமுகப்படுத்தும்ஒரு நிகழ்வில், பைடன் தனது புதிய அரசின் தொடக்கத்திற்கான முதல் மூன்று முன்னுரிமைகளை முன்வைத்தார்.

அப்போது ஜோ பைடன் கூறியதாவது, "தொற்றுப் பரவுவதைத் தடுக்க அனைத்து அமெரிக்கர்களும் 100 நாள்களுக்கு முகமூடி அணிய வேண்டும். கூட்டாட்சி கட்டடங்கள், பொதுப் போக்குவரத்திலும் அவ்வாறு கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதன்மூலம் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, 100 நாள்களுக்குள் பெரும்பான்மையான பள்ளிகளைத் திறக்க முடியும்” என்றார்.

இதையடுத்து ஜோ பைடன், இந்திய-அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தியை சர்ஜன் ஜெனரலாகவும், சேவியர் பெக்கெராவை சுகாதார மற்றும் மனித சேவைகள் (எச்.எச்.எஸ்.) செயலராகவும், மருத்துவர் ரோசெல் வலென்ஸ்கி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) இயக்குநராகவும், மருத்துவர் அந்தோணி ஃபாசியை தலைமை மருத்துவராகவும் நியமிக்க பரிந்துரைத்தார்.

அதேபோல் கோவிட்-19இன் ஒருங்கிணைப்பாளராக ஜெஃப் ஜீயண்ட்ஸிம், துணை ஒருங்கிணைப்பாளராக நடாலி குயிலியனும், பணிக்குழுவின் தலைவராக மருத்துவர் மார்செல்லா நுனேஸ்-ஸ்மித்தையும் பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க:ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் வசித்தார்களா?

ABOUT THE AUTHOR

...view details