அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் அதிபர் வேட்பாளர்களின் பொது விவாதம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ளீவ்லாந்த் நகரில் நடைபெறும் விவாத நிகழ்வில் இரு வேட்பாளர்களும் கோவிட்-19, பொருளாதாரம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் நேரடி விவாதம் மேற்கொள்ளவுள்ளனர்.