தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பயணக்கட்டுப்பாடு குறித்து அறிய 24 மணி நேர அழைப்புதவி சேவை

டெல்லி: இந்தியாவில் உள்ள பயணக்கட்டுபாடுகள் குறித்து அறிந்துகொள்ள அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் 24 மணி அழைப்புதவி சேவையை அறிவித்துள்ளது.

Coronavirus: Indian Embassy sets up helplines to address queries on travel restrictions Coronavirus Indian Embassy sets up helplines பயணக் கட்டுப்பாடு குறிந்து அறிய 24 மணி நேர ஹைல்ப்லைன் கொரோனா வைரஸ், பயணக் கட்டுப்பாடு
Coronavirus: Indian Embassy sets up helplines to address queries on travel restrictions Coronavirus Indian Embassy sets up helplines பயணக் கட்டுப்பாடு குறிந்து அறிய 24 மணி நேர ஹைல்ப்லைன் கொரோனா வைரஸ், பயணக் கட்டுப்பாடு

By

Published : Mar 13, 2020, 9:24 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும்விதமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தது.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அழைப்புதவி சேவையைத் தொடங்கி உள்ளது. அதன்படி பெர்முடா, டெலாவேர், கென்டக்கி, மேரிலாந்து, வட கரோலினா, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா ஆகிய நாடுகளின் வசிப்பவர்கள் 202-213-1364, 202-262-0375 என்ற எண்ணிலும் cons4.washington@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.

அலபாமா, புளோரிடா, ஜார்ஜியா, மிசிசிப்பி, புவேர்ட்டோ ரிக்கோ, தென் கரோலினா, டென்னசி, விர்ஜின் தீவுகளில் வசிப்பவர்கள் 404-910-7919, 404-924-9876 என்ற எண்ணிலும், cons-atlanta@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

இல்லினாய்ஸ், இந்தியானா, அயோவா, மிச்சிகன், மினசோட்டா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, விஸ்கான்சின் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் 312-687-3642, 312-468-3276 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது visa-chicago@mea.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

ஆர்கன்சாஸ், கன்சாஸ், லூசியானா, ஓக்லஹோமா, டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, கொலராடோ, நெப்ராஸ்காவில் வசிப்பவர்கள் அழைப்புதவி 713-626-2149 என்ற எண்ணிலும் enquiriescgi@swbell.net. என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:மனைவிக்கு கொரோனா அறிகுறி: கனடா பிரதமர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு

ABOUT THE AUTHOR

...view details