சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக 2011ஆம் ஆண்டு முதல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லகார்டின் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கிறிஸ்டின் லகார்டின் ராஜினாமா ஏற்பு!
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கிறிஸ்டின் லகார்டின் சமர்பித்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் நிர்வாகக் கூட்டம் அறிவித்துள்ளது.
Christine Lagarde
இந்நிலையில், கிறிஸ்டின் லகார்டினின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிறிஸ்டின் லகார்டின் வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 12ஆம் தேதியுடன் பதவி விலக இருப்பதாக அறிவித்துள்ளார். புதிய நிர்வாக இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்போது துணை நிர்வாக இயக்குநராக உள்ள டேவிட் லிப்டன் என்பவர் தற்காலிக நிர்வாக இயக்குநராகச் செயல்படவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.