தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Latest International News கேரட்டின் உதவியுடன் ப்ரபோஸ் செய்த கனடா காதலன்!

கேரட்டில் திருமண மோதிரத்தை வைத்து தனது காதலியிடம் ப்ரபோஸ் செய்துள்ளார் கனடா காதலன்.

ring in carrot

By

Published : Sep 26, 2019, 10:39 AM IST

Latest International News கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜான் நெவில், டேனியல் ஸ்கூயூர்ஸ். கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்துவரும் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், தன் காதலியை மணம் முடிக்க விரும்பிய ஜான், அதை அவரிடம் தெரிவிக்க சில மாதங்களுக்கு முன் மோதிரம் வாங்கினார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கனடாவில் வைர மோதிரத்தைத் தொலைத்த பெண் அந்த மோதிரத்தை பல ஆண்டுகளுக்குப் பின் அங்கு விளைந்த கேரட்டில் கண்டுபிடித்துள்ளார். அதேபோல தன் காதலியிடமும் ப்ரபோஸ் செய்ய நினைத்த ஜான், வீட்டின் பின்புறம் இதற்கென தனியாக ஒரு தொட்டி வாங்கி, அதில் வைரத்தைப் புதைத்து வைத்தார். அதன் மேல் கேரட் விதைகளைத் தூவியவர், அது வளரும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்.

John Neville and Danielle "DeeJay" Squires

கேரட் போதிய அளவு வளர்ந்த பின், அதை எடுக்கத் தன் காதலியிடம் உதவி செய்யக் கேட்டுள்ளார். இது எதையும் அறியாத அவர், கேரட்டை மண்ணிலிருந்து பிடுங்கியபோது, அதில் மோதிரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, டேனியல் தன் காதலியிடம் திருமணத்திற்கு ப்ரபோஸ் செய்ய, இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் திகைத்துப்போய்விட்டார்.

இதை அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து அது வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிக்கலாமே: உலகத் தலைவர்களைத் தெறிக்கவிடும் கிரேட்டா!

ABOUT THE AUTHOR

...view details